"சசிகலா தாய் அல்ல பேய்"-கடுமையாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

0 9041
சசிகலா ஒரு தாய் அல்ல பேய் என கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அதிமுகவை குறுக்கு வழியில் கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் சசிகலா நாடகமாடி வருகிறார் என்றார்.

சசிகலா ஒரு தாய் அல்ல பேய் என கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அதிமுகவை குறுக்கு வழியில் கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் சசிகலா நாடகமாடி வருகிறார் என்றார்.

திண்டுக்கல் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் நத்தம் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் பேசினார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது சசிகலாவுக்கு மட்டுமே தெரியும் என்று கூறிய அவர், மனசாட்சி என்ற ஒன்று இருந்தால் அதை சசிகலா வெளியில் சொல்வார் என்றும் ஆனால் அவருக்கு மனசாட்சியும் கிடையாது மண்ணாங்கட்டியும் கிடையாது என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments